சிபிஎல் 2021: முதல் வெற்றியைப் பெறுமா செயிண்ட் லூசியா கிங்ஸ்?

Updated: Sat, Aug 28 2021 21:55 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, கிரேன் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நடைரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

நடப்பு சீசனில் செயிண்ட் லூசியா அணி மோதிய முதல் போட்டியிலேயே 120 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதனால் நாளை நடைபெறும் போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆண்ட்ரே பிளட்சர், ரஹீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் முதல் போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய வஹாப் ரியாஸ், கேசரிக் வில்லியம்ஸ் ஆகியோருக்கு பதிலாக அல்சாரி ஜோசப் மற்றும் சமித் படேல் ஆகியோர் இடம்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் கடந்தாண்டு சிபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து நூழிலையில் கோப்பையை நழுவவிட்டுள்ளதால், இப்போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

உத்தேச அணி: ராகீம் கார்ன்வால், ஆண்ட்ரே பிளெட்சர், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மார்க் டீயல், ரோஸ்டன் சேஸ், டிம் டேவிட், சமித் பட்டேல், கீமோ பால், உஸ்மான் காதர், ஓபேத் மெக்காய், அல்சாரி ஜோசப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை