அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் முல்தான் சுல்தான்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சுல்தான்ஸ் அணியில் முகமது ரிஸ்வான் 21 ரன்களிலும், சொயிப் மசூத் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷான் மசூத் அரைசதம் கடந்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் 73 ரன்கள் எடுத்திருந்த மசூத் ஆட்டமிழந்தார். 

அதைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸ் தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News