பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 24ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ஹாரிஸ் - யாசிர் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதன்பின் யாசிர் கான் 35 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரிஸும் 70 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சோயிப் மாலிக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் ஃபஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.