பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 26ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்துலா ஷஃபிக் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - காம்ரன் குலாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபகர் ஸமான் அரைசதம் கடந்து அசத்த, மறுமுனையில் 41 ரன்களில் குலாம் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸ், ஃபகர் ஸமானுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த ஃபகர் ஸமான் 50 பந்துகளில் சதமடித்தது, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் அதிரடியாக விளையாடிய ஃபகர் ஸமான் 57 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 115 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து 22 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்திருந்த சாம் பில்லிங்ஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் வைஸ் முதல் பந்தை சிக்சருக்கு பற்றக்கவிட்டாலும், இரண்டாவது பந்திலேயே விக்கெட்டையும் இழந்தார். 

இறுதியில் ரஷித் கான் தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை பறக்கவிட, 20 ஓவர்கல் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட்  இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. இஸ்லாமாபாத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News