பாகிஸ்தானின் உள்ளுர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற  8ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பந்துவீச தீர்மானிதது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு மேத்யூ வேட் - ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் 36 ரன்களில் வேட் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதர் அலி 18, சோயிப் மாலிக் 10 ரன்கள் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய கேப்டன் இமாத் வாசிம் 19 பந்துகளில் 35 ரன்களையும், பென் கட்டிங் 20 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் 15 ரன்னிலும், ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மிர்ஸா தாஹிர் - காம்ரன் குலாம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பினர் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிர்ஸா தாஹிர் 45 ரன்னில் ஆட்டமிழக்க, காம்ரன் குலாம் 23 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் லாகூர் கலந்தர்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கராச்சி கிக்ஸ் தரப்பில் அகிஃப் ஜாவெத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News