ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைடடுத்து களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர் மிர்ஸா தாஹிர் 4 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஃபகர் ஸமான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்களிலும், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த அப்துல்லா ஷஃபிக் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார். பின்னர் இணைந்த சிக்கந்தர் ரஸா - டேவிட் வைஸ் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்களையும், டேவிட் வைஸ் 3 சிக்சர்களுடன் 24 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் ஸாகிர் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News