பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் 9ஆவது சீசன் பிஎஸ்எல் தொடரில் நேற்று நடைபெற்ற வரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலதான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முல்தான் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் 54 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 23 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தானர்.  இறுதியில் பிராத்வைட் 15 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 6 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் முகமது அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் டேவிட் மாலன், ரீஸா ஹென்ரிக்ஸ், யசிர் கான் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்த கையோடு 9 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 82 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவர் ஆட்டமிழந்தாலும் அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இணைந்த டேவிட் வில்லி - இஃப்திகார் அஹ்மத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு வெற்றியைத்தேடிக்கொடுத்தனர். இதில் டேவிட் வில்லி 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இஃப்திகார் அஹ்மத் 5 பவுண்டரி, 2 சிக்சர்களைச் என 34 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். 

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முல்தான் சுல்தான்ஸ் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News