பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!

Updated: Fri, Feb 23 2024 21:25 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லிக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(பிப்.23) நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முல்தானில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த ஹசிபுல்லா கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் பாபர் ஆசாமும், 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹசீபுல்லா கானும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 19 ரன்களுக்கும், பால் வால்டர் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ரோவ்மன் பாவெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என் 23 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஆசிஃப் அலியும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் லுக் வுட் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான பினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் டேவிட் வில்லி, முகமது அலி மற்றும் உசாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை