பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் 9ஆவது சீசன் பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முலதான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முல்தான் அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபர்ஹான் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - ரஸ்ஸி வேண்டர் டுசென் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ரஸ்ஸி வேண்டர் டுசென் 54 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 23 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தானர். 

இறுதியில் பிராத்வைட் 15 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 6 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. முல்தான் சுல்தான்ஸ் அணி தரப்பில் முகமது அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News