ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸின் சாதனைய முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Fri, Apr 05 2024 14:55 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில்லின் அபார ஆட்டத்தின் மூலம் 199 ரன்களைக் குவித்தது. இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்கள் என்ற இலக்கை விராட்டி எட்டியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

அதன்படி ஐபிஎல் தொடரில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை அதிகமுறை எட்டிய அணி எனும் மும்பை இந்தியன்ஸின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது. அதன்படி முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளை எட்டியிருந்தது. அதனை தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 6 முறை 200க்கு மேற்பட்ட இலக்கை துரத்தி வெற்றிபெற்று சாதனைப் படைத்துள்ளது.

 

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை