டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினார்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Thu, Jan 05 2023 08:35 IST
Image Source: Google

இந்தியா - வங்காளதேசம் இடையே நேற்று முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிராக புனேவில் நாளை நடைபெற உள்ள 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.

இதையடுது, ‘ஸ்கேன் எடுப்பதற்காக சாம்சன் மும்பையிலேயே இருப்பார்' என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சஞ்சு சாம்சன் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு மாற்று வீரராக ஜித்தேஷ் சர்மா எஞ்சியிருக்கும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளது. இவர் முன்னதாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 234 ரன்களை 163 ஸ்டிரைக் ரெட்டில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நாளை நடைபெறும் 2ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை