ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இத்தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 98 ரன்களையும், மெஹிதி ஹசன் 66 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியானது ரஹ்மனுல்லா குர்பாஸின் சதத்தின் மூலம், அஸ்மதுல்லா ஒமர்ஸாயின் அரைசதத்தின் மூலமும் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குபாஸ் 101 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 70 ரன்களையும் சேர்த்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இந்நிலையில் இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 22வயதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரது சாதனைகளை சமன்செய்து அசத்தியுள்ளார். 

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் 22வயதில் தலா 8 ஒருநாள் சதங்களை அடித்து சாதனை படைத்த நிலையில், அதனைத் தற்போது ரஹ்மனுல்லா குர்பாஸ் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 7 சதங்களுடன் இரண்டாம் இடத்தையும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், இலங்கையின் உபுல் தரங்கா ஆகியோர் தலா 6 சதங்களுடன் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

22 அல்லது அதற்கு குறைவான வயதில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள்

  • 8* - ரஹ்மானுல்லா குர்பாஸ் (46 இன்னிங்ஸ்), ஆஃப்கானிஸ்தான்
  • 8 - குயின்டன் டி காக் (52 இன்னிங்ஸ்), தென் ஆப்பிரிக்கா
  • 8 - சச்சின் டெண்டுல்கர் (113 இன்னிங்ஸ்), இந்தியா
  • 7 - விராட் கோலி (66 இன்னிங்ஸ்), இந்தியா
  • 6 - பாபர் அசாம் (32 இன்னிங்ஸ்), பாகிஸ்தன்
  • 6 - உபுல் தரங்கா (62 இன்னிங்ஸ்), இலங்கை

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News