ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால், கேப்டன் சாய் கிஷோர், நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் ஆகியோர் அடுத்தடுத்தி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 42 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் இணைந்த விஜய் சங்கர் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பாகள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சங்கர் 44 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டானர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக தமிழ்நாடு அணி 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணிக்கும் தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் பிரித்வி ஷா 5 ரன்களுக்கும், புபென் லல்வானி 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்துள்ள முஷீர் கான்(24) - மொஹித் அவஸ்தி(01) ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News