ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர். 

Advertisement

இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் அடுத்த சுற்று ரஞ்சி கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ், ரியான் பராக் உள்ளிட்டோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் முந்தைய சுற்றுகளில் விளையாடிய ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் 30ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. 

ஆனால் முந்தைய சுற்று போட்டிகளில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜாவைத் தவிர்த்து மற்ற இந்திய அணியின் முக்கிய வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறிய நிலையில், தற்சமயம் அடுத்த சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான டெல்லி அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

இதில் ஆயூஷ் பதோனி கேப்டனாக தொடரும் நிலையில் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். முன்னதாக இப்போட்டியில் விராட் கோலி அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆயூஷ் பதோனி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலி முதல் முறையாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

டெல்லி அணி: ஆயுஷ் பதோனி (கே), விராட் கோலி, பிரணவ் ராஜ்வன்ஷி, சனத் சங்வான், அர்பித் ராணா, மயங்க் குசைன், சிவம் சர்மா, சுமித் மாத்தூர், வான்ஷ் பேடி, மணி கிரேவால், ஹர்ஷ் தியாகி, சித்தாந்த் சர்மா, நவ்தீப் சைனி, யாஷ் துல், ககன் வாட்ஸ், ஜாண்டி சித்து, ஹிம்மத் சிங், வைபவ் காந்த்பால், ராகுல் கெஹ்லோட், ஜிதேஷ் சிங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News