நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை மறுநாள் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கைப்பற்றும். 

Advertisement

அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று சரிவிலிருந்து மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், இந்திய வீரர்கள் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 4 மற்றும் 5ஆம் இடங்களிலும் நீடிக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி வரும் டிம் செஃபெர்ட் 20 இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

அதேபோல் மற்றொரு நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலன் 8 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. இதில் வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் முதலிடத்திலும், இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஆதில் ரஷித் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்த பட்டியலில் இந்திய அணியின் ரவி பிஷ்னோய் 6ஆம் இடத்தையும், அர்ஷ்தீப் சிங் 9ஆம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி 23 இடங்கள் முன்னேறி 12ஆம் இடத்தையும், பென் சீயர்ஸ் 22 இடங்கள் முன்னேறி 67ஆம் இடத்தையும், ஸகாரி ஃபல்க்ஸ் 41 இடங்கள் முன்னேறி 90ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News