மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணியானது டிராவிஸ் ஹெட் மற்றும் ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரிஸ் கஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களையும் சேர்த்தனர். நியூயார்க் அணி தரப்பில் ரஷித் கான் மற்றும் கீரென் பொல்லார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது ஆரம்பம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், மொனாங்க் படேல், டெவால்ட் பிரீவிஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் கீரென் பொல்லார்ட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் அந்த அணி 13.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியின் போது வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கிளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வீரர் ரஷித் கான் கைப்பற்றி அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ரஷித் கான் பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து பந்தை தவறவிட்டதுடன், க்ளீன் போல்டும் ஆனார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News