நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!

Updated: Thu, Oct 24 2024 20:27 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்வ்ஸால் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி டிம் சௌதீ பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ள்ள ஷுப்மான் கில் நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது.

இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் என களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து 243 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. அந்தவகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 531 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நாதன் லையன் 530 விக்கெட்டுகளுடன் 7ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது அஸ்வின் அவரை பின்னுக்கு தள்ளி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வர்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் நாதன் லையனின் சாதனையையும் ரவி அஸ்வின் முறியடித்துள்ளார். முன்னதாக இந்த தொடரில் 43 போட்டிகளில் விளையாடியுள்ள நாதன் லையன் 187 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது ரவி அஸ்வின் 39 போட்டிகளில் 189 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை