இந்த முறை இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறும் எல்லா அணி நிர்வாகங்களுமே தங்களது அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவம் பேட்ஸ்மேன்களுக்கானதாக இருந்தாலும் கூட, இந்திய மைதானங்களில் சுழற்பந்துவீச்சு எடுபடும் என்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு அணியும் தங்களது விளையாடும் அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு இடத்தை அதிகமாகவே கொடுக்கும்.

Advertisement

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் பிரதான சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருவரும் உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெறுவது உறுதி. மேலும் அக்சர் படேல் மற்றும் சாகல் இருவரும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் இந்தியாவின் இந்த சுழற்பந்துவீச்சு கூட்டணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் கூட கிடையாது. இந்த காரணத்தால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்த முறை டி20 உலக கோப்பையில் திடீரென வாய்ப்பு கிடைத்தது போல் கிடைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Advertisement

அதே சமயத்தில் இன்னொரு ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பெயரும் தற்பொழுது தேர்வு குழுவின் பரிசீலனையில் இல்லை என்பதாகவே தெரிகிறது. இது சம்பந்தமாக நேரடியாக ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கேட்கப்பட்ட பொழுது, "இதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்க வேண்டாம் என்று நான் எப்பொழுதோ முடிவு செய்து விட்டேன். உலக கோப்பையில் என்னை தேர்வு செய்யாவிட்டால் அது எந்த வகையிலும் என்னை மனதளவில் பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் அணியை தேர்ந்தெடுப்பது என்னுடைய வேலை கிடையாது.

என் கையில் இல்லாத விஷயங்களை பற்றி நான் யோசிக்கவே கூடாது என்று சில காலத்திற்கு முன்பாக நான் முடிவு செய்து இருந்தேன். நான் நேர்மையான வாழ்க்கை மற்றும் எனது கிரிக்கெட்டில் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறேன். மேலும் எனது சிந்தனை செயல்முறைகளில் இருந்து நெகட்டிவான விஷயங்களை வெளியில் வைக்க எப்பொழுதும் முயற்சி செய்கிறேன். நான் அந்தந்த நாளை எடுத்துக் கொண்டு வாழ்கிறேன். நான் எந்த வேலையையும் மிச்சம் வைத்திருப்பதாக நினைக்கவில்லை. நான் இந்திய அணியில் இல்லாவிட்டாலும் கூட, இந்திய அணி உலக கோப்பையை வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்.

கோவிட் இருந்த காலகட்டத்தால் அந்த விதிகளுக்குள் இருந்து கிரிக்கெட் விளையாடுவது 3 ஆண்டுகளாக கொஞ்சம் கடினமாக இருந்தது. இப்பொழுது எனக்கு ஒரு நல்ல இடைவேளை கிடைத்திருக்கிறது. மேலும் நான் வீட்டில் இருக்க விரும்புகிறேன். இன்னும் கொஞ்சம் கிளப் கிரிக்கெட் விளையாடுவேன். அடுத்து டிசம்பரில் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு நான் தயாராவேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News