இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 9.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டதுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சிறப்பான சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ள அவர், இத்தொடரிலும் சர்வதேச டெஸ்ட்டில் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. 

Advertisement

750 சர்வதேச விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின்  இந்திய அணிக்காக இதுநாள் வரை 281 போட்டிகளில் 368 இன்னிங்ஸ்களில் விளையாடி மூன்று வடிவங்களையும் சேர்த்து 744 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது இந்திய அணிக்காக அனில் கும்ப்ளே மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கர்ட்னி வால்ஷை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு

அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடரில் மேற்கொண்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடிப்பார். அதன்படி இதுவரை, அஸ்வின் 100 டெஸ்டிகளில் விளையாடி 189 இன்னிங்ஸ்களில் 516 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 9ஆவது இடத்தில் உள்ளார். அதேசமயம் கர்ட்னி வால்ஷ் 132 போட்டிகளில் 242 இன்னிங்ஸில் விளையாடி 519 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

ஷேன் வார்னேவின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு

இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அஷ்வின் எட்டினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அவர் கூட்டாக 2ஆவது இடத்தைப் பெறுவார். தற்போது, ​​இந்த வடிவத்தில் 36 முறை ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ரிச்சர்ட் ஹாட்லீயுடன் கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் வார்னே டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News