தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ரவி அஸ்வின்!

Updated: Thu, Aug 29 2024 10:27 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து 18ஆவது சீசனுக்கான வேலைகளை ஐபிஎல் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்க்கியுள்ளன. ஏனெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்டு, வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரின் மீதான கூடுதல் எதிர்பார்ப்புளும் அதிகரித்துள்ளன.

அதேசமயம், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி மற்றும் ரிடென்ஷன் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் தன்னுடைய ஆல்டைம் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளார். இதில் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடுத்த வீரராகவும், ரோஹித் சர்மா அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவையும், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவையும், ஐந்தாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளார். சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இதுவரை 5 முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனைத்தொடர்ந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ள அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் அவர் தனக்கு இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் அவர் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியில், ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் நாயகனாக திகழ்ந்த கிறிஸ் கெய்ல், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல் ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரஸல், டுவைன் பிராவ்வோ மற்றும் கீரன் பொல்லார்ட் உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

அஸ்வின்  தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்: ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை