இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியிலும் கேப்டன் டாம் லதேம் 15 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த டெவான் கான்வே - வில் யங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் வில் யங்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களையும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கி வந்த டெவான் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை சரியாக கணிக்க முடியாமல் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் 91 ரன்களில் ஆட்டமிழந்த டெவான் கான்வே சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இதுகுறித்த காணொளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News