கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 26 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். 

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்திய அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 5,248 ரன்களையும், பந்துவீச்சில் 434 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போதுள்ள அணியின் மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி 3,309 ரன்களையும், 516 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

இதுதவிர இந்த சர்வதேச அளவில் இந்த மைல் கல்லை எட்டும் 11ஆவது வீரர் எனும் பெருமையையும் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.  இதற்கு முன்னர் கபில் தேவ், அஸ்வின் ஆகியோரைத் தவிர்த்து 8 வீரர்கள் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் & 3000 ரன்களை குவித்த வீரர்கள்

  • கபில் தேவ் (IND)
  • இயன் போத்தம் (ENG)
  • டேனியல் வெட்டோரி
  • இம்ரான் கான் (PAK)
  • ஷான் பொல்லாக் (SA)
  • ஸ்டூவர்ட் பிராட் (ENG)
  • ரவிச்சந்திரன் அஸ்வின் (IND)
  • ஷேன் வார்ன் (AUS)
  • ரிச்சர்ட் ஹாட்லீ (NZ) 
  • சமிந்த வாஸ் (SL)
  • ரவீந்திர ஜடேஜா (IND)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News