ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

அதன்பின் 62 ரன்களில் தமிம் இக்பால் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 81 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே களத்தைவிட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அனமுல் - முஷ்பிக்கூர் இணையும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் 300 ரன்களைத் தாண்டியது.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 303 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச தரப்பில் தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹிம், அனமுல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறன்ஙிய ஜிம்பாப்வே அணியில் ரெஜிஸ் சகாப்வா, முசகண்டா, வெஸ்லி மதவெரே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த இன்னசெண்ட் கையா - சிக்கந்தர் ரஸா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இன்னசெண்ட் கையா, சிக்கந்தர் ரஸா இருவருமே சதமடிக்க அணியின் வெற்றியும் பிரகாசமானது.

இதன்மூலம் 48.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியையும் வீழ்த்தியது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரஸா 135 ரன்களையும், இன்னசெண்ட் கையா 110 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News