ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச அணி விவரம்

Updated: Sun, Sep 26 2021 12:50 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

முன்னதாக நடப்பு சீசனில் இவ்விரு அணிகலும் மோதிய போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றிருந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இப்போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச அணி விவரம் இதோ..!

ஆர்சிபி உத்தேச லெவன் - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன் - குயின்டன் டி காக், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை