Royal Challengers Bangaluru vs Chennai Super Kings, IPL 2024 Dream11 Team: இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

RCB vs CSK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

RCB vs CSK, Pitch Report

பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

RCB vs CSK Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 32
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 21
  • முடிவில்லை - 01

RCB vs CSK Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

Royal Challengers Bangaluru vs Chennai Super Kings Probable Playing XI

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.

RCB vs CSK, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், டேரில் மிட்செல், ரஜத் படிதார், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - லாக்கி ஃபெர்குசன், துஷார் தேஷ்பாண்டே.

RCB vs CSK Dream11 Prediction, Today Match Prediction, Today Match RCB vs CSK, RCB vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, RCB vs CSK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bangaluru vs Chennai Super Kings

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News