Royal Challengers Bengaluru vs Gujarat Titans Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

RCB vs GT: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் -   எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 02, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

RCB vs GT Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 14 போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 9 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 7 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 141 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

RCB vs GT: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs GT Head To Head Record

  • மொத்தம் - 05
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 03
  • குஜராத் டைட்டன்ஸ் - 02

RCB vs GT Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ரஜத் படிதர் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, சாய் சுதர்ஷன் (கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - லியாம் லிவிங்ஸ்டன்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா.
Advertisement

Royal Challengers Bengaluru vs Gujarat Titans Probable Playing XI

Royal Challengers Bengaluru Probable Playing XI: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

இம்பேக்ட் வீரர் - சுயாஷ் சர்மா.

Advertisement

Gujarat Titans Probable Playing XI: சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், காகிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இம்பேக்ட் வீரர் - இஷாந்த் சர்மா.

RCB vs GT Dream11 Prediction, RCB vs GT, RCB vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs GT Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Gujarat Titans

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News