Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18அவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகள் ஒருவார காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

Advertisement

இந்நிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அந்தவகையில் நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் 58ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பெங்காளூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் நிலையில் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

RCB vs KKR Match Details

  • மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - மே 17, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

M.Chinnaswamy Stadium, Bengaluru Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 58 போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 9 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது, 7 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 141 ரன்களாகவும் உள்ளது. அதேசமயம் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

RCB vs KKR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RCB vs KKR Head To Head Record

  • மொத்தம் – 35
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 20
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 15

RCB vs KKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்- பில் சால்ட், ரஹ்மனுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், க்ருணால் பாண்ட்யா
  • பந்துவீச்சாளர்கள் - லுங்கி என்கிடி, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
Advertisement

RCB vs KKR Predicted Playing 11

Royal Challengers Bengaluru XI : பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்.

இம்பேக்ட் வீரர் - சுயாஷ் சர்மா

Advertisement

Kolkata Knight Riders XI : சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ரிக் நோர்கியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

இம்பாக்ட் வீரர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

RCB vs KKR Dream11 Prediction, RCB vs KKR, RCB vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RCB vs KKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News