17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றி என புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கிறது. மேலும் இனிவரும் போட்டிகளில் ஆர்சிபி அணி வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இங்கு எளிதாக 180 ரன்களைகூட எட்டலாம் என்பது அணிகளுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 12
  • முடிவில்லை - 01

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்,

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • கீப்பர்கள் - ஹென்ரிச் கிளாசென், தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணைக்கேப்டன்), ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், அபிஷேக் சர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், வில் ஜாக்ஸ், கே நித்தேஷ் ரெட்டி
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார்

RCB vs SRH IPL 2024 Dream11 Prediction, Today Match RCB vs SRH, RCB vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, RCB vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bangaluru vs Sunrisers Hyderabad

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News