அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. பெனோனி நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஹாரி டிக்ஸன் - சாம் கான்ஸ்டாஸ் இணை களமிறங்கினர்.

Advertisement

இதில் கான்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹாரி டிக்ஸனுடன் இணைந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  பின்னர் இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெய்ப்ஜென் 48 ரன்களிலும், ஹாரி டிக்ஸர் 45 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

Advertisement

பின்னர் களமிறங்கிய ஹர்ஜாஸ் சிங் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இப்போட்டியில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அணிக்கு உதவினார்.  அதேசமயம் மறுபக்கம் 20 ரன்கள் எடுத்திருந்த ரியான் ஹிக்ஸ் தனது விக்கெட்டை இழக்க, 3 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 55 ரன்களைச் சேர்த்திருந்த ஹர்ஜாஸ் சிங்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து வந்த மெக்மில்லன், ஆண்டர்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆலிவர் பீக் 46 ரன்களைச் சேர்த்திருந்தார்.  இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அண்டர்19 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அண்டர் 19 அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 3 ரன்களுக்கும், முஷீர் கான் 22 ரன்களுக்கும், கேப்டன் உதய் சஹாரன் 8 ரன்களுக்கும், சச்சின் தாஸ், பிரியான்ஷு மோலியா ஆகியோர் 9 ரன்களிலும், அராவல்லி அவனிஷ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதார்ஷ் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களிலும், மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த முருகன் அபிஷேக் 42 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மஹ்லி பியர்ட்மேன், ராஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக ஐசிசி அண்டர் 19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News