Advertisement
Advertisement

Raj limbani

யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றது ஆஸ்திரேலி
Image Source: Google

யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!

By Bharathi Kannan February 11, 2024 • 21:08 PM View: 117

அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. பெனோனி நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஹாரி டிக்ஸன் - சாம் கான்ஸ்டாஸ் இணை களமிறங்கினர்.

இதில் கான்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹாரி டிக்ஸனுடன் இணைந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  பின்னர் இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெய்ப்ஜென் 48 ரன்களிலும், ஹாரி டிக்ஸர் 45 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

Related Cricket News on Raj limbani