இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடருக்கான இடம், தேதி ஆகியவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Advertisement

அதன்படி, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

Advertisement

மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது புத்தாண்டு டெஸ்ட் போட்டியாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  மேலும் இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற தனது கருத்தை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இது மிக கடுமையான போட்டியாக அமையும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக நான் நினைக்கிறேன். 

ஏனெனில் கடந்த இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர்களிலும் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்திய அணி இங்கு அதிக வெற்றிகளைப் பெற்றுளதை நாம்மால் பார்க்கமுடியும். அதுமட்டுமில்லாமல் தற்சமயம் நாங்கள் மீண்டும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்கு திரும்பியுள்ளோம். இது இந்த தொடரின் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். ஏனெனில் கடந்த இரண்டு முறையும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகவே நடைபெற்றிருந்தது.  

Advertisement

ஆனால் தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருப்பதால் இதற்கான அனைவரும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்ரு நினைக்கிறேன். அதேசமயம் இதானல் நிறைய போட்டியில் டிராவில் முடிவடையுமா என்பது எனக்கு தெரியவில்லை. மேலும் இத்தொடரைப் பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக கூறவேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை வெற்றியாளராக பார்ப்பேன். மேலும் நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருபோதும் முனையப் போவதில்லை.

மேற்கொண்டு இத்தொடரில் எதாவது ஒரு போட்டி டிராவில் முடிவடையலாம், அல்லது மோசமான வானிலை காரணமாக போட்டியின் முடிவு மாறலாம் என்பதால், இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நம்புகிறேன். ஆனாலும் இந்தியா வலுவான அணியை இங்கு கொண்டு வரும் என்று தெரியும். இருப்பினும் நாங்கள் தற்போது உலக டெஸ்ட் சாம்பியனாக இருக்கிறோம் என்பதை நினைவில் வைக்கவும்” என்று தெரிவித்துள்ளார். 

பார்டர் கவாஸ்கர் தொடர் போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட் - பெர்த் - நவம்பர் 22 - 26
  • இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) - அடிலெய்ட் ஓவல் - டிசம்பர் 06-10
  • மூன்றாவது டெஸ்ட் - பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18
  • நான்காவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) - மெல்போர்ன் - டிசம்பர் 26-30
  • ஐந்தாவது டெஸ்ட் (புத்தாண்டு டெஸ்ட்) - சிட்னி - ஜனவரி 03-07(2025) 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News