ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ்க்கு தொடக்கமே பின்னடைவாக அமைந்துள்ளது. மும்பை அணியில் ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

Advertisement

நடப்பு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளும் போது மும்பை அணி ஜேசன் பெகுரண்டஃப், ஜோப்ரா ஆர்ச்சர், கேமரூன் கீரின் , டிம் டேவிட் ஆகிய 4 வீரர்களை வைத்து களமிறங்கியது. இதில் பெஹன்ண்டஃப் 3 ஓவரில் 37 ரன்களை விட்டு கொடுத்தார்.

Advertisement

ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 2 ஓவரில் 30 ரன்களை விட்டு கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 33 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் மும்பை அணி தங்களது பிளானை மாற்றி கொள்ள முடிவு எடுத்துள்ளது. ரிச்சர்ட்சனுக்கு பதில் ஏற்கனவே மும்பை அணிக்காக விளையாடிய ரெய்லி மெர்டித்தை மும்பை அணி ஒப்பதம் செய்தது.

கடந்த சீசனில் மெரிடித் தொடக்க சில போட்டிகளில் சொதப்பினார். ஆனால், அதன் பிறகு சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனில் அவர் ஒட்டு மொத்தமாக 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது மெரிடித் செம ஃபார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த பிபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய மெரிடித் 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால், சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் மெரிடித், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரை களமிறங்க உள்ளது. இதே போன்று கேமரூன் கிரீனை தொடக்க வீரராக பயன்படுத்த மும்பை இந்தியன்ஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித்தின் இந்த திட்டத்தை தோனி முறியடிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News