Rishabh Pant Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பந்த், முன்னாள் இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனியின் சிறந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெறுற்றுள்ளார்.

Advertisement

அதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் 233 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்தில் அதிக ரன்களைச் சேர்த்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் எனும் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிப்பார். முன்னதாக மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் இதுவரை 23 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி 778 ரன்களைக் குவித்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. 

அதேசமயம் ரிஷப் பந்த் இங்கிலாந்து மண்ணில் 17 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளார். மேலும் தற்போதைய சுற்றுப்பயணத்தின் ஐந்து போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் 223 ரன்கள் சேர்த்தால் தோனியின் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை படைக்கும் வாய்ப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்தில் வெளிநாட்டு விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்

  • மகேந்திர சிங் தோனி (இந்தியா) - 23 இன்னிங்ஸ்களில் 778 ரன்கள்
  • ராட் மார்ஷ் (ஆஸ்திரேலியா) - 35 இன்னிங்ஸ்களில் 773 ரன்கள்
  • ஜான் வைட் (தென்னாப்பிரிக்கா) - 27 இன்னிங்ஸ்களில் 684 ரன்கள்
  • இயன் ஹீலி (ஆஸ்திரேலியா) - 24 இன்னிங்ஸ்களில் 624 ரன்கள்
  • ஜெஃப் டுஜோன் (மேற்கிந்திய தீவுகள்) - 20 இன்னிங்ஸ்களில் 604 ரன்கள்
  • ஃபாரூக் இன்ஜினியர் (இந்தியா) - 17 போட்டிகளில் 563 ரன்கள்
  • ரிஷப் பந்த் (இந்தியா) - 17 போட்டிகளில் 556 ரன்கள்

Also Read: LIVE Cricket Score

Advertisement

ரிஷப் பந்த் குறித்து பேசினால், இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 75 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 2948 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் ஆரம்பத்தில் சோபிக்க தவறிய அவர், இறுதிகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News