ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?

Updated: Wed, Nov 06 2024 10:13 IST
Image Source: Google

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாட்டினர்) தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.  மேற்கொண்டு 320 சர்வதேச வீரர்களும், 1,224 ஆன்கேப்ட் வீரர்களும், 30 அசோஷியட் தேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த 48 சர்வதேச வீரர்களும், 272 வெளிநாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து 965 இந்திய அன்கேப்ட் வீரர்களும், 104 வெளிநாடுகளைச் சேர்ந்த அன்கேப்ட் வீரர்களும் பங்கேற்கின்றன. அதேசமயம் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய 155 வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த பட்டியலில் பங்கேற்கும் வீரர்களுடைய அடிப்படை தொகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தக்கவைக்கப்படவில்லை.  மேலும் இந்த மூன்று வீரர்களும் ரூ.2 கோடியை தங்கள் அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளனர். இது தவிர, ராஜஸ்தான் ராயல்ஸால் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் ரூ.2 கோடியை தங்கள் அடிப்படை தொகையாக வைத்துள்ளனர்.

அதேசமயம் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் அடிப்படை விலையும் 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கலீல் அகமது, தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர், அவேஷ் கான், இஷான் கிஷன், முகேஷ் குமார், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, டி நடராஜன், தேவ்தத் படிக்கல், குர்னால் பாண்டியா, ஹர்சல் படேல், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் ரூ.2 கோடியை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ளது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை படைத்த மிட்செல் ஸ்டார்க், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுதவிர்த்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரூ.1.25 கோடிக்கு ஏலத்தில் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மேலும் இவர் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் பிரித்வி ஷா மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் தங்களுடைய அடிப்படை தொகையாகா ரூ.75 லட்சமாக நிர்ணயித்துள்ளனர். இருப்பினும் இதில் சர்ஃப்ராஸ் கான் கடைசி ஐபிஎல் தொடரின் போது எந்த அணிகளாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த ஏலத்தின் மூலம் ஒவ்வொரு அணியும் 25 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில், தக்கவைக்கப்பட்ட வீரர்களைத் தவிர்த்து மற்ற வீரர்களை இந்த ஏலத்தில் அணிகள் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை