ரிஷப் பந்த் தேர்வு செய்த கனவு அணி; அதிருப்தியில் ரசிகர்கள்!

Updated: Thu, Nov 10 2022 13:41 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மணிமகுடம் சேர்த்து வருபவர் சூரியகுமார் யாதவ், மேலும் இறுதி வரை நின்று இந்திய அணிக்கு போராடி பல வெற்றிகளை பெற்று தந்து வருபவர் விராட் கோலி.

இருவரையும் தவிர்த்து விட்டு தற்போது நடைபெறும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்.

பந்த் தனது கனவு அணியை தேர்வு செய்திருக்கிறார். ஐந்து பேர் கொண்ட இந்த அணியில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருக்கும் இடம் கொடுக்கவில்லை. இரண்டு பேட்ஸ்மேன்களையும், ஒரு ஆல்ரவுண்டரையும், ஒரு சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் உள்ளடக்கிய ஐந்து பேர் கொண்ட இந்த அணியில், முதல் வீரராக ஜோஸ் பட்லரை தேர்வு செய்து, “அவர் இல்லாமல் இந்த அணி பலம்பொருந்தியதாக இருக்காது.” என்றார்.

அடுத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனை தேர்வு செய்துவிட்டு,பவுலிங் மற்றும் பேட்டிங்கில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இவர், பீல்டிங்கிலும் 100% சிறப்பாக செயல்படுவதால் இவரை எடுத்து இருக்கிறேன் என்றார்.

மூன்றாவது வீரராக இந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. தற்போது காயம் காரணமாக உலக கோப்பையில் இல்லை என்றாலும், உலகத்தரம் மிக்க பவுலர். இவரை கண்டு எதிரணிகள் நடுங்குகின்றன என குறிப்பிட்டு இருக்கிறார்.

நான்காவதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் ரசித் கானை தேர்வு செய்துவிட்டு, பந்துவீச்சில் மட்டுமே அச்சுறுத்தி வந்த இவர் சமீப காலமாக கீழ் வரிசையில் இறங்கி பேட்டிங்கிலும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவரை எடுத்திருக்கிறேன் என்றார். ஐந்தாவதாக, என் மீது நானே நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த அணியில் என்னை நான் தேர்வு செய்து கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்தின் கனவு அணி: ஜோஸ் பட்லர், ரிஷப் பந்த், லியம் லிவிங்ஸ்டன், ரஷீத் கான், ஜஸ்பிரித் பும்ரா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை