அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நட்சத்திர வீரர் 6 ப்வுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை திணறவைத்த ஜஸ்பிரித் பும்ரா தொடர்நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில், போட்டி முடிந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தனர். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோஹித் சர்மாவின் சமூகவலைதள பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த டி20 உலகக்கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்ததில் எனக்கும் அணியினருக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது. பல வார்த்தைகள் உள்ளன, ஆனால் நேற்று எனக்கு என்ன அர்த்தம் என்பதை வெளிப்படுத்த சரியானவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் நான் செய்வேன், அவற்றை நான் பகிர்ந்து கொள்கிறேன், ஆனால் இப்போது நான் ஒரு பில்லியன் நனவாகும் கனவில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளதுடன, தரையில் படுத்திருக்கும் புகைப்படத்தையும் அப்பதிவில் இணைந்துள்ளார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த சமூக வலைதள பதிவானது இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.