ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதேசமயம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய் ஆணி கைப்பற்றும் இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும். இந்நிலையில் இப்பொட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும், அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தது.
ஆனால் தான் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இல்லை எனவும், அதனால் இதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை என்றால், நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதே அவரின் இலக்காக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “நீங்கள் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நிலையை அடையத் தொடங்கும்போது, நீங்கள் ஓய்வு பெறுவதற்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஆனால் ரோஹித் சர்மா ஏன் ஓய்வை அறிவிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இறுதிப்போட்டியில் அவர் விளையாடியதை கருத்தில் கொண்டு “நான் இன்னும் நன்றாக விளையாடுகிறேன்' என்று சொல்ல முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன்.
இதன் மூலம் அவர் தான் இந்த அணியில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இந்த அணியை வழிநடத்துவதை நான் விரும்புகிறேன் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தான் ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்று கூறியதன் மூலம், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையில் (2027 இல்) விளையாடுவதற்கான இலக்கை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மா, ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் எனும் தனித்துவ சாதனையை. இதற்குமுன் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியின் கேப்டனும் இந்த சாதனையை படைத்து கிடையாது.
அவரது தலைமையிலான இந்திய அணி 2023ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியி, 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தற்போது 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி ஆகியவற்றிற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இதில் அவர் டி20 உலகக்கோப்பை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket