ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா!

Updated: Fri, Aug 30 2024 21:52 IST
Image Source: Google

இந்தியாவில் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் அடுத்த மாதம் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில்  இந்த தொடரில் இந்தியாவின் பல மூத்த வீரர்கள் விளையாடுகிறார்கள்

இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த் என பல நட்சத்திர வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். ஆனால், இந்த துலீப் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் துலீப் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் இருவரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியிருக்க வேண்டும். ஏனெனில் ஐபிஎல் முடிந்த பிறகு அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

நாம் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், ஒருவர் 4 நாள் கிரிக்கெட்டை விளையாடி, 4வது நாளில் விக்கெட் எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் 4-5 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைத்து பயிற்சி செய்யத் தொடங்கும் போது அவர்கள் முதிர்ச்சியடைவார்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்களில், குடும்ப நேரமும் முக்கியமானது

Also Read: Funding To Save Test Cricket

கான்பூரில் உள்ள மைதானம் கங்கை நதிக்கு அருகில் இருப்பதால் காலை வேளையில் குளிராக இருக்கும். வானிலை மோசமாக இருக்கும், அதனால் அவர்கள் அதை சமாளிக்க வேண்டும் ஆனால் இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. இருப்பினும், வஙக்தேசத்தையும் அவர்கள் சமீபத்தில் முதல் டெஸ்டில் பாகிஸ்தானை தோற்கடித்ததையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அதனால் நாம் சில நல்ல கிரிக்கெட்டைப் பார்ப்போம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை