17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டு ரைலீ ரூஸோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த இஷான்  கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் அவர் தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார். 

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 250ஆவது போட்டியில் விளையாடும் இரண்டாவது வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 256 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் தினேஷ் கார்த்திக் 249 போட்டிகளில் விளையாடி மூன்றாம் இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்

  • 256 - எம்எஸ் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்)
  • 250 - ரோஹித் சர்மா (டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்)
  • 249 - தினேஷ் கார்த்திக் (டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ்)
  • 244 - விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • 232 - ரவீந்திர ஜடேஜா (ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் லயன்ஸ்)
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News