ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!

Updated: Wed, Aug 14 2024 14:57 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 27 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதன்படி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். முன்னதாக ஷுப்மன் கில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்சமயம் ரோஹித் சர்மா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். 

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் தொடர்கின்றார். மேற்கொண்டு அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டரும் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்காவும் ஒரு இடம் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் அப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் நமீபியாவின் பெர்னார்ட் ஸ்கால்ட்ஸ், ஆஃப்கானின் முகமது நபி, பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

 

இந்த பட்டியலி இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 8ஆம் இடத்தில் நீடிக்கும் நிலையில், முகமது சிராஜ் 5 இடங்கள் பின் தங்கி 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 17 இடங்கள் முன்னேறி 59ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதே தொடரில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக செயல்பட்ட அக்ஸர் படேல் 13 இடங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 இடங்கலுக்கும் மூன்னேறி 83 மற்றும் 87ஆவது இடங்களை பிடித்துள்ளனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேற்கொண்டு ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றங்களும் இல்லை. அதேசமயம் அமெரிக்க அணியைச் சேர்ந்த ஸ்டீவன் டெய்லர் 6 இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்தையும், கனடா அணியின் ஹர்ஷ் தாகர் 25 இடங்கள் முன்னேறி 46 ஆவது இடத்தையும், இலங்கை அணியின் துனித் வெல்லாலகே 15 இடங்கள் முன்னேறி 52ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை