தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!

Updated: Mon, Jul 15 2024 14:24 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

மேலும் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீராட் கோலியும், அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அறிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த செய்தியானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம். இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருந்தார். 

தற்போது 37 வயதை எட்டியுள்ள ரோஹித் சர்மார் எப்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற கேள்விகள் எழுந்து வ்ருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ரோஹித் சர்மாவிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘‘தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. மனநிறைவோடு ஓய்வுபெற விரும்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார். 

 

முன்னதாக அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மாவும் தான் தற்போது ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என கூறியுள்ளதால், நிச்சயம் அவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமான ரோஹித் சர்மா, இதுவரை இந்திய அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் 4138 ரன்களையும், 262 ஒருநாள் போட்டிகளில் 10,709 ரன்களையும் அடித்துள்ளார்.  மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 151 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை