தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.

Advertisement

அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்தியாவிற்கு இன்று வந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

Advertisement

தென் ஆப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபாரமாக விளையாடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள், மிடில் ஆர்டர் ஆகிய பிரச்னைகள் உள்ள நிலையில், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த தொடருக்கான அணி தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்னும் 2 நாட்களில் நடக்கும் என தெரிகிறது. காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை அடைந்துவிட்ட ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அணி தேர்வுக்கான ஆலோசனைக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்வார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளைப்பந்து அணிகளில் இடம்பிடித்த சீனியர் ஸ்பின்னர் அஸ்வின், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிட்னெஸை அடைந்துவிட்ட ஜடேஜா, பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங், பவுலிங் செய்துவருகிறார். எனவே ஜடேஜா அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News