ரோஹித்தின் நீக்கத்தை மறைப்பதற்கான காரணம் என்ன? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜனவரி 03) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் இருந்து தனக்கு தானே ஓய்வளித்துக்கொண்டார். ஏனெனில் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து வெறும் 31 ரன்கலை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகரிக்கத் தொடங்கின.
மேற்கொண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாகவும் சில கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அவர் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து, ஜஸ்பிரித் பும்ராவை அணியின் கேப்டனாக செயல்படவைத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து சரியான காரணத்தை ஏன் வழங்கவில்லை என முன்னாள் வீரர் சஞ்சு மஞ்ச்ரேக்கர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மஞ்ச்ரேக்கர், “இப்போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி நிர்வாகத்திடம் எனக்கு இருக்கும் பிரச்சனை யாதெனில் அவர்களின் ரகசிய நடிவடிக்கை தான். மேலும் ரோஹித் தனது ஓய்விற்கான காரணத்தை மறைத்து வைக்கும் அளவிற்கு சிறந்தவர் அல்ல. ஒருவேளை இந்த முடிவை விராட் கோலி எடுத்திருந்தால் அதனை என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் ரோஹித் சர்மா விளையாடிய 60 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு வெளிநாட்டு சதம் மற்றும் 40 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ளார். அதனால் தான் அவரது ஓய்வுக்கான காரணம் ஏன் மிகவும் மர்மமாக இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்தனாது தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாம மாறியுள்ளது.