CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!

Updated: Sat, Feb 15 2025 22:09 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

அந்தவகையில் , ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பொறுப்புகளும் அதிகரித்துள்ளதால் அவர்கள் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்து துபாயில் நடைபெறவுள்ளதால், இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் இன்று துபாய் சென்றடைந்துள்ளனர். அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரு மும்பை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்ற காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து அவர்கள் நாளை முதல் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தொடரில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த குழுவில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன. அதன்படி இந்திய அணி தனது முதல் போட்டியை பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை