டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?

Updated: Tue, May 14 2024 15:35 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் இந்திய அணி இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த அணிக்கு துணைக்கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது பிசிசிஐ. இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற கேப்டனான ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. 

 

அதிலிருந்தே ரோஹித் சர்மாவின் ஃபார்ம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவர் அடுத்தடுத்து பேட்டிங்கில் சொதப்பி வருவது பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் தான் அவர் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை. 

இந்திய அணிக்காக இதுவரை 151 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 3974 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை விளாசியுள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் மற்றும், அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் எனும் சாதனைகளையும் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை