காபா டெஸ்ட்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?

Updated: Thu, Dec 12 2024 08:56 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பான சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 3 சிக்ஸர்களை அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளர். அதேசமயம் ரோஹித் சர்மா இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 88 சிக்சர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய அவர், தன்பின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்தே அவர் வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். 

மேலும் இவர்து மோசமான ஆட்டம் காரணமாக ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் ரோஹித் சர்மா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஐசிசி பேட்டர்களுக்கன தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா, இப்போது டிசம்பரில் 31 வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தத்திற்கும் ரோஹித் சர்மா தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை