இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!

Updated: Wed, Jun 26 2024 22:09 IST
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது. இந்நிலையில், இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15ஆவது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது 12-13ஆவது ஓவருக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.

ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு வீரர் 15ஆவது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை செதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். அதனால் இதுகுறித்து நிச்சயம் நடுவர்கள் கவணிக்க வேண்டியது அவசியம்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முவைத்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இங்கு உள்ள சூழ்நிலைகள் மிகவும் சூடாகவும், வறண்ட ஆடுகளங்களாகவும் உள்ளன. இது போன்ற ஆடுகளங்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்?. நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இது எல்லா அணிகளுக்கும் நடக்கிறது, எங்களுக்கு மட்டுமல்ல. சில நேரங்களில் மக்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும்” என்று தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை