Arshdeep singh reverse swing
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது.
இந்நிலையில், அந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். அதற்கு பதிலளித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இங்கு உள்ள சூழ்நிலைகள் மிகவும் சூடாகவும், வறண்ட ஆடுகளங்களாகவும் உள்ளன. இது போன்ற ஆடுகளங்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை என்றால், வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்?. நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை.
Related Cricket News on Arshdeep singh reverse swing
-
இங்கு இல்லை என்றால் வேறு எங்கு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்? - இன்ஸமாம் குற்றச்சாட்டிற்கு ரோஹித் பதிலடி!
நாங்கள் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை. இங்கே, உள்ள மைதானங்களில் 12-15 ஓவர்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என இன்ஸமாம் உல் ஹக்கின் குற்றச்சாட்டிற்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்தது எப்படி? - இந்தியா மீது இன்ஸாமாம் உல் ஹக் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்ஸாமாம் உல் ஹக் குற்றஞ்சாட்டியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47