டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!

Updated: Sun, Jan 23 2022 21:40 IST
Rohit Sharma Should Be Made Full Time Test Captain, Says Ravi Shastri (Image Source: Google)

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. 

இந்நிலையில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் தற்போது அதிகரித்துள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதால், அவரே டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக செயல்படுவார் என்ற கருத்துகள் வெளிவருகின்றன. 

இந்நிலையில் ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ரோஹித் உடல்தகுதியுடன் இருந்தால், ஏன் டெஸ்டிலும் கேப்டனாக இருக்க முடியாது. அவர் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் காயம் காரணமாக அவரால் அங்கு செல்ல முடியவில்லை. ஏன், துணைக்கேப்டனாக செயல்படும் அவரை கேப்டனாக உயர்த்த முடியாது.

அதேசமயம் ரிஷப் ஒரு அற்புதமான இளம் வீரர். ஒரு பயிற்சியாளராக, நான் அவரை மிகவும் விரும்பினேன், அவருடைய அணுகுமுறை மற்றும் அவரைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்பார்.

நிறைய பேர் சொல்கிறார்கள், அவர் எப்போதும் அவர் விரும்பியதைச் செய்வார் ஆனால் அது உண்மையல்ல. அவர் விளையாட்டை நன்றாகப் புரிந்துக்கொள்வார். என்னை விட எனது குழு முயற்சிக்கு எப்போதும் முதலிடம் கொடுப்பார். எனவே, அவர் எப்போதும் தலைமைத்துவத்தை மனதில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை