இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்களை கடந்த சமயத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களைச் சேர்த்து, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் தான் ரோஹித் சர்மா இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், 264 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10, 831 ரன்களை குவித்து, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஐந்தாவது வீரர் எனும் பெருமயைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில், 18,426 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் விராட் கோலி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News